11.6.09

நீயும் நானும் - 2


முதல் பகுதி படிக்காதவர்கள், தயவு செய்து அதை
படித்து விடவும், இது ஒரு தொடர் கதை, ஆகவே ,




இனி , 2 - ம் , பகுதி


நண்பன் ஒருவனுக்கு உடல் நிலை சரியில்லாமல், நகரின்
மிகப் பெரிய ஹாஸ்பிடல் ஒன்றில் அனுமதிக்கப் பட்டிருந்தான்.
அவனைக் காணும் பொருட்டு, அங்கு சென்று,
காத்திருந்த லிப்டில், நான்காம் மாடிக்கு செல்லும்
போது, அது எதிர் பாராமல், மக்கர் செய்து, நின்று விட,
அப்போது தான்,

உடன் இருப்பவர்களை, கவனித்ததில், மின்னலாக இருந்த
அனிதாவை பார்த்ததும், இப்போது நினைத்தாலும், அன்று
எங்களுக்காகவே அந்த லிப்ட் அப்படி நின்று போனதாக,
தோன்றியது.

பிறகு, ஒருவரை ஒருவர் அடிக்கடி எதேச்சையாக பார்ப்பது
போல் பார்த்து, பிறகு, இருவர் உள்ளமும் ஒரு சேர, இருவரும்
ஒரே சமயத்தில் தாங்கள், காதலிப்பதை உணர்ந்து, அதை,
எப்படியோ வெளிப்படுத்தி விட, அனைத்துக் காதலர்களைப்
போல ஊர் சுற்ற ஆரம்பித்து,

அன்று, ஒரு சினிமா தியேட்டர், சென்று வரும் போது எப்படியோ ,
அப்பா கண்ணில் பட்டு விட,

வீட்டில் , விக்கி நீ படித்தவன் உனக்கு நான் எதுவும் சொல்லத்
தேவை இல்லை, உனக்கே நல்லது, கேட்டது தெரியும், யார் அது ?

அப்பா, அது அனிதா, என்றதும் எனக்கு தெரிந்த அவளின்
குடும்பத்தை பற்றி சொன்னதில், அவளின் அப்பா பெயரை
சொன்ன உடன்,

விக்கி , நீ காதலிப்பதை பற்றி நான் ஒன்றும் சொல்லவில்லை,
ஆனால், எனக்காக ஒரு உதவி செய்வாயா ?

என்னப்பா ?

அந்தப் பெண் அதாம்பா, அனிதா உன்னை இது வரை எப்படி
காதலித்தாலோ எனக்கு தெரியாது, ஆனால், இனிமேல் ,
நீ இல்லாமல் அவளால் இருக்க முடியாது, என்ற நிலைக்கு
அவளை கொண்டு வர வேண்டியது, உன் பொறுப்பு,

என்ற அப்பாவை சந்தேகத்துடன் பார்க்க , தொடர்ந்த அவர்,

விக்கி இந்த உலகத்தில் நான் பழி வாங்க வேண்டிய முதலும்
கடைசியுமான ஒருவன் அனிதாவின் அப்பா ஒருவன் தான்.
அதைப் பற்றி பிறகு , உன்னிடம் சொல்கிறேன், அது வரை ,
நீ அனிதாவிடம் நெருங்கிப் பழகு , இவளை வைத்து தான்
அந்த ஏமாற்றுக் காரனை, வீழ்த்த வேண்டும்.

அப்பா !! என்ற என்னை,

ஏதும் பேசாதே, எனக்காக இந்த உதவியை நீ
செய்து தான் ஆக வேண்டும், இது ஒன்று தான், எனக்காக
நீ செய்யும் உதவி, என்ற அப்பா விறு விறு,
என்று மாடிப் படி ஏறி சென்று விட,

அவர் சென்ற திசையில் பார்த்துக் கொண்டே இருந்த
விக்கியை , நெருங்கி வந்த மதன்,

விக்கியின் ஒன்று விட்ட பெரியப்பாவின் மகன் மட்டுமல்லாமல்,
தன் நெருங்கிய நண்பனும் கூட, அவன் தான் நான்
படிக்கப் போயிருந்த இத்தனை வருடமும், அப்பாவுடன்
இருந்து அவரின் வியாபாரங்களில் உதவி வந்தான்,
அவன் சொன்னது,

விக்கி , ஒரு சில வருடத்திற்கு முன் சிடியிலே இருக்கும் பெரிய பிசினெஸ்
மேன்களில், முதலாவது இடத்தில் இருந்த உன் அப்பா, இன்று இருக்கும்
இந்த நிலைக்கு அந்த அனிதாவின் அப்பா, நடராஜ் தான் காரணம்,
என்று சொன்னதோடு அதற்கான காரணத்தை
சொல்ல ஆரம்பித்தான் ...

- - அடுத்த பகுதி வரும் ஞாயிறு அன்று தொடரும்,


மறக்காமல் உங்களின் கருத்துக்களை பதிவு செய்க, நன்றியுடன்

- பாண்டி .



7.6.09

நீயும் நானும்

மக்கள் மட்டுமே கொட்டிக்கிடக்கும், அனேகமாக ஒரு முடிவுடன் எல்லோரையும் ஏமாற்றும், மெரீனா கடற்கரை,

எதோ ஒன்றை மணலில் தேடுவது போல, கைகளால் மணலை அலைந்து கொண்டிருந்தான். அவன் அருகில் எஸ், உங்கள் ஊகம் சரி தான்.

மிகவும் வாடி இருந்தாள்,, காரணம், நேற்று அவளை பெண் பார்த்து விட்டு சென்றது.

விக்கி, எதுவுமே பேசாம இருந்தா எப்படி?

என்ன சொல்ல சொல்றே, நேர உங்க வீட்டுக்கு வந்து, ஐயா, உங்க பெண்ணும் நானும் ஒரு வருசமா, காதலிக்கறோம், எனக்கு வேலையே உங்க பெண்ண லவ் பண்றது தான்.எங்களை சேத்து வைக்கணும். அப்படின்னு சொல்ல சொல்றியா?

ஏன்? கேட்டா என்ன தப்பு?

என்ன அனிதா, வேல இல்ல மத்த படி பாத்தாக் கூட, உங்க அளவுக்கு எனக்கு வசதி இல்ல,

விக்கி, அதல்லாம் எனக்கு தெரியாது, இன்னும் ரெண்டு நாள்ல எங்க வீட்ல வந்து எங்க அப்பா கிட்ட பேசுங்க, இல்லன்னா, அடுத்த வாரம், நீங்க என்னை பொணமாத்தான் பாப்பீங்க. நா வரேன்.விக்கி ,

அனி, அனி , இந்த மாதிரி தயவு செய்து பேசாதே, நீ இல்லாத இந்த உலகத்துல எனக்கு மட்டும் என்ன வேல இருக்குது, அப்படி சாவறதா இருந்தா, ரெண்டு பேரும் ஒண்ணா சாவலாம், வாழும் பாக்கியம் தான் நமக்கு கிடைக்கல,அட்லீஸ்ட் சாவாவது நம்மை ஒண்ணா சேக்கட்டும்.

சரி விக்கி , அடுத்த வாரம் வரைக்கும் பார்க்கலாம். பிறகு ஒரு முடிவுக்கு வரலாம் ,

பேசி விட்டு சென்ற அனிதாவை, அவள் கண்ணில் இருந்து மறையும் வரைபார்த்துக் கொண்டு இருந்தான், விக்கி என்ற விஸ்வநாதன்.

அவன், முதுகில் தட்டி என்ன அப்படியே, ஷாக் ஆயிட்டே விக்கி, என்ற மதனை, மகிழ்ச்சியுடன் பார்த்த விக்கி. வா , நம்ப எதிர் பார்த்த படி இப்ப தான் அவளை, பேச வைக்க முடிஞ்சது இந்த விசயத்த உடனே அப்பா கிட்ட சொல்லணும்.

அனிதா வீட்டில் ஓடி வந்து அப்பாவிடம் கை கொடுங்கப்பா !! நம்ப எதிர் பார்த்த படிவிக்கி என் கூட சாவறதுக்கு ரெடி ஆயிட்டான்,

சொன்ன மகளை, பெருமையுடன் பார்த்தார், சென்னையின் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவரான நடராஜ்,

அப்பா, நம்ப திட்டம் சக்சஸ், எத்தனை நாளா நாம திட்டம் போட்டோம்அதுக்கு இது தான் சரியான சந்தர்ப்பம், சொன்ன தன் மகனை ஒரு வித பாசத்துடன் பார்த்த கந்தசாமி,

சரி எப்போ ? எங்க? எப்படி ?

இருப்பா , நீ பாட்டுக்கு கேள்வி மேல கேள்வியா கேக்கறே ? யோசிப்போம் .

டேய் , மதன் நீ தான்நல்ல நல்ல ஐடியாவா சொல்வியே !னக்கு எதாவது ஐடியா,தோணலியா ?

நீ வேற , விக்கி நான் எப்பவோ ஒரு ஐடியா பண்ணி இருக்கேன், பார்க்கலாம் அதுக்கு முன்ன நம்ப சில வேலைகள் செய்யணும் நாளைக்கு காலை, முதல் வேலையா, என் கூட வா .

சரி, மதன் காலையில மீட் பண்ணுவோம், அப்பா , பை , நா என் ரூமுக்கு போறேன் .

விளக்கை அணைத்துவிட்டு படுக்கையில் விழுந்தான், கண்ணில் வழியும் நீரைதுடைக்க மனமில்லாமல், ச்சே , என்ன வாழ்க்கை இது ?

அனிதா என்னை மன்னிப்பாயா ? தூக்கம் தொலைந்து போன இரவில் அவன் மட்டும் விழித்துக் கொண்டு அந்த நாளை எண்ணிப் பார்த்தான்,

- - அடுத்த பகுதி வரும் ஞாயிறு அன்று தொடரும்


அன்புள்ள நண்பர்களுக்கு இது என்னுடைய முதல் கதை முயற்சி, உங்களுக்கு பிடித்திருந்தால் கருத்து சொல்லவும் மேலும் உங்களின் ஊக்கமே என்னைப் போன்றவர்களின் எழுத்து ஆர்வத்தை ஊக்கப்படுத்தும்.

நன்றியுடன், பாண்டி.